தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 4 ஐஜிக்கள், 2 டிஐஜிகள், 29 எஸ்பிக்கள், 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 230 காவலர்களை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவிட்டார். குறிப்பாக சர்ச்சையில் சிக்கிய காரணத்தினாலும், நிர்வாக காரணத்திற்காகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.