அக்னி குழம்பை கக்கி புழுதி பறக்க மேலேறிய ஸ்டார்ஷிப்-மெய்சிலிர்க்க விடும் காட்சி

Update: 2025-08-27 10:46 GMT

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டம்...10வது சோதனை வெற்றி

எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் திட்டம், 10வது முறை சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. பிரபல தொழிலதிபர் எலாஸ் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், ​மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தின்கீழ், ஸ்டார்ஷிப் திட்டத்தை உருவாக்கி, 9 முறை நடத்திய சோதனையில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில், ஸ்டார்ஷிப் விண்கலத்தை சுமந்து சென்ற சூப்பர் ஹெவி பூஸ்டர், 10வது முறையாக சோதனையை மேற்கொண்டது. இதில், சோதனை விண்கலம் இந்தியப் பெருங்கடலில் இலக்கை நோக்கி தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்