ஆன்மீக சுற்றுலா பயணம் - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக ஆடிமாதத்தை ஒட்டி, அம்மன் கோவில்களில் சுற்றுலா பயணம் நடத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதன் படி வரும் ஜீலை மாதம் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம்
15 ஆம் தேதி வரை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆன்மீக சுற்றுலா பயணம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆடி அம்மன் சுற்றுலாவில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பயணம் செய்யும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பதற்காக 4 விதமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.