தாறுமாறாக ஓடி... தலைகுப்புற கவிழ்ந்த பிரமாண்ட லாரி - அதிர வைக்கும் வீடியோ
சாத்தூர் சோதனைச்சாவடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் நோக்கி, சோலார் பேனல் ஏற்றி சென்ற கண்டெய்னரி லாரி, கோவில்பட்டி சாத்தூர் சோதனைச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் பயணித்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.