ராஜ மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2025-07-26 01:51 GMT

ராமநாதபுரம் ராஜமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ராஜமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு 21 வகையான வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்