ஆந்திராவில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் விரட்டி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதி வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்ட போது, அவர் ஜமுனா மரத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், காரில் 7.50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததையும் கண்டு பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.