விண்ணை சூழ்ந்த புகை மூட்டம்.. மளமளவென பற்றி எரிந்த காட்டுத்தீ - மக்கள் வெளியேற்றம்
விண்ணை சூழ்ந்த புகை மூட்டம்.. மளமளவென பற்றி எரிந்த காட்டுத்தீ - ஏழு இடங்களில் மக்கள் வெளியேற்றம்
கனடாவின் கிழக்கு மாகாணத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது.
அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள நியூபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தில், Newfoundland and Labrador அடர்ந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி புகை வெளியேறியது.
காட்டுத்தீயால் ஏழு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர். சுமார் ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பில் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.