வடபழனியில் ஆகாய கண்ணாடி நடை மேம்பாலம் அமைக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை அரஞ்ச் வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கட்டப்பட்டு வரும் வழித்தடத்தில் அமையவிருக்கும் வடபழனி ரயில் நிலையத்தையும், ஏற்கனவே பச்சை வழித்தடத்தில் இருக்கும் வடபழனி ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய கண்ணாடி நடை மேம்பாலத்தை அமைக்க 8.12 கோடி ரூபாய் செலவில் டெண்டர் கோரியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்