செயல்படாத Lift - காலை இழந்தவர் துடிதுடித்த துயரம்

Update: 2025-03-07 06:54 GMT

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 72 வயதுடைய கால் இல்லாத சர்க்கரை நோயாளி படிக்கட்டில் ஏற முடியாமல் தவித்த வீடியோ காட்சி வேகமாக பரவிவருகின்றது. சிவகங்கை மாவட்டம் கல்லூரி சாலையில் வசித்து வருபவர் சித்திரை அழகு. இவர் விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்துவிட்டார். இந்த நிலையில், கண் பரிசோதனை செய்வதற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது லிப்ட் செயல்படாததால் மருத்துவமனை படிக்கட்டில் ஏறிச் செல்ல முடியாமல் தவித்து நின்றார். இந்த வீடியோ வைரலான நிலையில், மாற்றுத் திறானளிகளுக்கு ஏற்ற வகையில் மருத்துவமனையில் வசதிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்