Sivagangai | விஷயம் தெரிந்ததும் திடீர் விசிட் - கடுப்பாகி ஸ்பாட்டில் வைத்தே கலெக்டர் போட்ட உத்தரவு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தேர்தல் வட்டாட்சியர் மேசியதாஸை தெருநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து நேரடியாக களத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தெருநாய்கள் குழந்தைகள், பொதுமக்கள், வாகனங்களை விரட்டிச் செல்வதை கண்டறிந்தார். இதன் பின்னர் நகராட்சி ஆணையர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததற்காக 3 நாளில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.