சிவகங்கையில் எட்டாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட ஒரேயொரு அலுவலக உதவியாளர் பணிக்கு 851 பேர் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒரேயொரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு படித்தவர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த ஒரே ஒரு பணியிடத்திற்கு 851 பேர் விண்ணப்பித்துள்ளனர்.