Sivagangai Bus Accident | தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை பேருந்து விபத்திற்கு இதுதான் காரணம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்திற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் அவர் மீது மோதாமல் பேருந்தை வளைத்தபோது, எதிரில் வந்த பேருந்து மீது மோதி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம், காங்கேயத்தில் இருந்து வந்த பேருந்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.