Sivaganga | ஆத்திரத்தில் ஒன்று திரண்டு போலீசிடம் வாக்குவாதம் செய்த திருநங்கைகள்.. திடீர் பரபரப்பு

Update: 2025-10-24 11:27 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செல்லப்பனேந்தல் கிராமத்தில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் திருநங்கை பாக்கியா என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காவல் நிலையத்திற்கு வெளியே திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்