SIR Tamilnadu | BLO அதிகாரி மீது தாக்குதல் - SIR ஃபார்ம்கள் கிழிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு

Update: 2025-11-23 03:37 GMT

பிஎல்ஓ அதிகாரி மீது தாக்குதல் - எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் கிழிப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வாக்காளர் திருத்த பட்டியல் முகாமிற்கு சென்ற பூத் லெவல் அதிகாரியை தாக்கி, எஸ்.ஐ‌.ஆர் விண்ணப்ப படிவங்களை கிழித்து சேதம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜக்கனாரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம், அப்பகுதியை சேர்ந்த சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் அவரது காரை கற்களால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்