மருதமலையில் வெள்ளிவேல் திருடியவர் சிக்கினார்

Update: 2025-04-10 04:30 GMT

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருதமலை கோயில் அடிவாரத்தில் உள்ள ஒரு மடத்தில் இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் ஒன்றை சாமியார் ஒருவர் திருடியதாக போலீசில் புகார் தரப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தனர்

வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில் பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தன. தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மா போலீசார் கைது செய்தனர். இந்த தியான மண்டபம் தனியாருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்