"உங்களுக்காக முதல்வர் காத்திருக்கணுமா?" கோபமான அமைச்சர் தங்கம் தென்னரசு

Update: 2025-08-06 13:32 GMT

விருதுநகரில் புதிய அரசு அருங்காட்சியகம் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருப்பதால், அதிகாரிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்துகொண்டார். அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு இந்த மாதம் 25ம் தேதி உடன் ஒப்பந்த தேதி நிறைவடையும் நிலையில், 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கட்டுமான பணிகள் எப்போது முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும், நீங்கள் அருங்காட்சியகம் கட்டி முடிக்கும் வரை, திறப்பு விழாவுக்காக முதல்வர் காத்திருப்பாரா? என்றும் கடிந்துகொண்டார். பின்னர், ஒப்பந்ததாரரை அழைத்து, விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்