கேட்கவே காது கூசும் வார்த்தை - இளம்பெண்ணை கட்டையால் அடித்த வழக்கறிஞர்

Update: 2025-07-18 03:12 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவருக்கும் பக்கத்து நிலத்துக்காரர் ரவிசந்திரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் நிலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ரவிசந்திரன் மகனும் வழக்கறிஞருமான லோகநாதன் என்பவர், ராமலிங்கம் மகள் வள்ளியை கட்டையால் தாக்கியுள்ளார். இருதரப்பினரையும் சேர்த்து 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்