பாட்டிக்கு கொள்ளி வைத்த பேரனுக்கு பேரதிர்ச்சி - உடலில் பரவிய தீ.. நடுங்கவிடும் வீடியோ

Update: 2025-08-26 05:50 GMT

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தகன மேடையில் எரிவாயு கசிந்ததால் மூதாட்டி இறுதிச் சடங்கின் போது 3 பேர் காயமடைந்தனர். பத்தனம்திட்டா மாவட்டம் ராணி தோட்டமோன் மேப்ராத்தைச் சேர்ந்த மூதாட்டி மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு பேரன் ஜிஜோ கற்பூரம் ஏற்றி இறுதிச்சடங்கு செய்தார். அப்போது தகன மேடையில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஜிஜோ உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். தகன மேடை பணியாளர்கள் மதுபோதையில் எரிவாயுவை திறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்