ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய் திருவாரூரில் அதிர்ச்சி

Update: 2025-08-21 02:16 GMT

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூத்தாநல்லூர் அருகே மேல்கொண்டாளி கிராமத்தில் வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை தெருநாய் இழுத்து சென்று கடித்துக் குதறிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுமட்டுமின்றி குழந்தையை காப்பாற்ற சென்ற பாட்டியையும் தெருநாய் கடித்து குதறியது. பின்னர், அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்