சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ஸ்டீபனை ஒரு கும்பல் புதுச்சேரிக்கு கடத்தி சென்று, அவரது மனைவியிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. போலீசில் புகார் அளித்துவிட்டு, பணம் கொண்டு வந்துள்ளதாக கூறிய பெண் சென்ற நிலையில், அங்கு வந்த இருவரை மறைந்திறந்த போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பிரேம் ஆனந்த், ஸ்டீபனிடம் வேலைக்காக 4 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இதனால் பிரேம் தனது நண்பர்கள் மற்றும் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ உதவியாளர் ஹரி உடன் சேர்ந்து ஸ்டீபனை கடத்தியது தெரியவந்தது. தற்போது பிரேம் ஆனந்த், சத்தியராஜ், முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.