``மாற்றுத்திறனாளி சிறுவன் 2 வருடமாக அலைக்கழிப்பு’’ கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி
உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு - வேதனை
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு 18 மாதமாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை அடைந்துள்ளனர். பிறவியிலேயே பார்வை மாற்றுத்திறனாளியான சிறுவனுக்கு உதவித்தொகை பெற தமிழக அரசிடமிருந்து ஆணை பெற்ற நிலையில், கடந்த 18 மாதமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தினர் அலைக்கழிப்பதாக, பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பினர் புகாரளிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.