பாலியல் சேட்டை.. பாடம் புகட்டிய மக்கள் - கையெடுத்து கும்பிட்டும் புரட்டி எடுத்த வீடியோ

Update: 2025-05-18 09:02 GMT

திருவொற்றியூர் பகுதியில், மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் இளம் பெண் ஒருவர், விளையாட்டு பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மதுபோதையில் இருந்த ஒரு இளைஞர், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் இளைஞரை சிறைபிடித்து தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார், இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்