மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ..சேலத்தில் அதிர்ச்சி

Update: 2025-07-13 15:13 GMT

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ.. சேலத்தில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை ஓமலூர் மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது. இதையடுத்து , அவர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்ததன் பேரில், அதே பள்ளியில் பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வடுகன்பட்டியை சேர்ந்த 43 வயதான ஆசிரியர் தங்கவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்‌. போலீஸ் விசாரணையில் அவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தது தெரிய வந்ததை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்