வீடு தேடி வரும் திட்டம்.. "உங்களுடன் ஸ்டாலின்" இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று முதல் அக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு வார்டுகளிலும் தலா 2 முகாம்கள் வீதம் 400 முகாம்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் முகாம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்பட உள்ள சேவைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய கையேட்டை வழங்குவார்கள். சென்னையில் இன்று 25, 38, 76, 109, 114, 143, 168 ஆகிய 7 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது.