மயங்கி விழுந்த மனைவியை தீ வைத்து கொளுத்திய கொடூர கணவன்... கையோடு கர்மா கொடுத்த தண்டனை
சாத்தூர் அருகே மனைவியை எரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர்கள், பொன்னுசாமி முனீஸ்வரி தம்பதி. இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது. சம்பவத்தன்று மனைவியின் தலையில் தாக்கிய போது, அவர் மயக்கமடைந்துள்ளார். அதிர்ச்சியான பொன்னுசாமி, மனைவியை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது பொன்னுசாமி மீதும் தீப்பற்றிக் கொண்டது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம், தன் மனைவி தீ வைத்துக் கொண்டு த*கொ* செய்து கொண்டதாக பொன்னுசாமி நாடகமாடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொன்னுசாமியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மையை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.