Saroja Devi Funeral | நடிகை சரோஜா தேவி உடலுக்கு நடிகர்கள் விஷால், கார்த்திக் நேரில் அஞ்சலி
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடலுக்கு நடிகர்கள் விஷால், கார்த்திக் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரத்திற்கு சென்ற நடிகர்கள், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெலுங்கு, கன்னட திரையுலக பிரபலங்களும் சரோஜா தேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.