Chennai Sanitary Workers Protest | தூய்மை பணியாளர் சங்க தலைவர் பாரதி முதல்வருக்கு வைத்த ஒரே கோரிக்கை
சென்னை மாநகராட்சி மீண்டும் ஒப்பந்த பணியை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 4 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் நிலையில், முதலமைச்சர் இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.