தமிழ்நாட்டிலேயே உருவான காற்றில்லா குளிர்விக்கும் தொழில்நுட்பத்தால் ஆன புதிய சாம்சங் Wind Free ஏசியை, சென்னை ராஜாபாதர் தெருவில் உள்ள ரத்னா பேன் ஹவுஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் அறிமுக விழாவில், ரத்னா பேன் ஹவுஸ் மேலாண்மை இயக்குனர் விஜய் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் Wind Free மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய மாடல்களை வெளியிட்டனர். AI வசதியால் First Comfort Cooling மற்றும் அதிக வெப்பத்திலும் நிறைவான குளிரை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற இந்த ஏசியின் விலை 32 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குவதாக ரத்னா பேன் ஹவுஸ் மேலாண்மை இயக்குனர் விஜய் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.