எந்தவொரு ஊழியரையும் தொழிலாளர் குழுவில் சேரவோ அல்லது தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்த வில்லை என சாம்சங் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சாம்சங் ஊழியர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்து வரும் நிலையில், சாம்சங் நிர்வாகம் இந்த விளக்கத்தை கூறியுள்ளது. அதில், குறிப்பாக, கேள்விக்குரிய ஊழியர்கள் இந்தநிறுவனத்தின் கொள்கையை மீறி உள்ளதாகவும், தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் முறையான விசாரணையைத் தொடர்ந்து, தகுந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.