சமயபுரம் பெண் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் - புதர் மறைவில் பேசும்போது அரங்கேறிய அந்த பயங்கரம்

Update: 2025-02-12 09:08 GMT

சமயபுரம் அருகே, பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி உதவியுடன் தனிப்படை போலீசார் கொலையாளியை கைது செய்தனர். சேலம், கெங்கவல்லி பகுதியை சேர்ந்த சிவா என்பவர் ஶ்ரீரங்கம் பகுதியில் கட்டிட பணி செய்து வந்தார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த யாசகம் பெறும் பெண்ணான கவிதாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிறழ் உறவில் இருந்து வந்த நிலையில், சமயபுரம் அருகே இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது புதர்மறைவில் பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிவா கவிதாவை கொலை செய்துவிட்டு தப்பி சேலத்தில் தலைமறைவானார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்