Salem Railwaystation | ரத்தம் சொட்ட சொட்ட ரயில் கண்ணாடியை உடைத்த காதலன்.. பார்த்து பதறிய போலீஸ்

Update: 2025-08-05 06:28 GMT

Salem Railwaystation | ரத்தம் சொட்ட சொட்ட ரயில் கண்ணாடியை உடைத்த காதலன்.. பார்த்து பதறிய போலீஸ்

காதல் விவகாரம் - ரயில் கண்ணாடியை உடைத்த வாலிபர்

சேலம் ரயில் முனையத்தில் ரயிலின் கண்ணாடிகளை கையாலேயே உடைத்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கன்னியாகுமரி-திப்ரூகர் இடையே இயக்கப்பட்டு வரும் இந்தியாவின் நீண்டதூர ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் சேலம் வந்தபோது, இளைஞர் ஒருவர், ரயிலின் ஏசி பெட்டி கண்ணாடிகளை கையாலேயே ரத்தம் சொட்ட அடித்து உடைத்துக்கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் பீகாரை சேர்ந்த கவுரவ்குமார் என்பதும், காதல் விவகாரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு சேலம் வந்த நிலையில், ரெயில் கண்ணாடிகளை உடைத்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்