Salem | Bike Theft | விலை உயர்ந்த பைக்கை சைடு லாக்கை உடைத்து அசால்ட்டாக தூக்கி சென்ற இளைஞர்கள்
சேலத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை, இரண்டு மர்ம நபர்கள் உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பூர், வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார். சில நாட்களுக்கு முன்பு இவரது இரு சக்கர வாகனம் காணாமல் போனது. இந்த நிலையில், வாகனத்தின், சைடு லாக்கை இரண்டு இளைஞர்கள் உடைத்து திருடிச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.