``நானே ரூ. 200 கூலிக்கு போறேன்..'' வங்கியில் ரூ.28 லட்சம் டெபாசிட்? அதிர வைத்த IT நோட்டீஸ்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தனது வங்கிக்கணக்கில் சுமார் 28 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக விவசாயி, நீதிமன்றத்தில் புகார் அளித்தார். வளக்காப்பட்டு கிராமத்தில், மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த அண்ணாதுரை, விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சேலம் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தில், வங்கியில்
28 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கலக்கமடைந்த அண்ணாதுரை, ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்ட பணிக்குழு சார்பு நீதிபதியிடம் மனு அளித்தார்.