திருப்பூர் அருகே பக்தர்கள் பேருந்து ஒன்று, லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். பெங்களூருவில் இருந்து சபரிமலைக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பேருந்து ஓட்டுனர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.