சென்னை ஆழ்வார்பேட்டையில் ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற 22வது ஆண்டு ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சியை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில், ரஷ்யாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 17 நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்த கலை நிகழ்ச்சி சென்னையை அடுத்து கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, திருச்சி, சிவகாசி ஆகிய நகரங்களில் 18 கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட உள்ளது.