RSS | Mohan Bhagwat | RSS-ல் இஸ்லாமியர்களுக்கு அனுமதி உண்டா? - RSS தலைவர் சொன்ன எதிர்பாரா பதில்
ஆர்எஸ்எஸில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணையலாமா என்ற கேள்விக்கு RSS தலைவர் மோகன் பகவத் பதில்
ஆர்எஸ்எஸ்-ல் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இணையலாமா ? என்ற கேள்விக்கு அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார். பாரத் மாதாவின் குழந்தைகளாகவும் இந்து சமூகத்தின் உறுப்பினர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வரையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரையும் ஆர்எஸ்எஸ் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். சங்கத்தில் பிராமணர்கள், வேறு சமூகத்தினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என யாருக்கும் அனுமதி இல்லை என்றும் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.