திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலில் ரோப் கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ரோப் கார் சேவை இயங்கி வருகிறது. இந்த சேவை நாளை ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானை பாதை மின் இழுவை ரயில் மூலம் சாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.