Palacode | வாழைத்தோட்டத்தில் இரவில் கேட்ட சேவலின் அலறல்.. `அதை' நேரில் பார்த்து குலைநடுங்கிய விவசாயி
பாலக்கோடு அருகே குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சேவலை கவ்வி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டத்தில் விநாயகம் என்பவர் தனது விவசாய நிலத்தில் வசித்து வருகிறார்.வீட்டின் வெளியில் வித்தியாசமான சத்தம் கேட்க,வெளியே வந்து பார்த்த அவர் பதுங்கி இருந்த சிறுத்தை சேவலை கவ்விச்சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடித்து வனப்பகுதியில் விட,வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.