கேஸ் வெல்டிங் மூலம் நகைக்கடையில் கொள்ளை.. ஆரணியில் அதிர்ச்சி

Update: 2025-07-27 01:58 GMT

ஆரணி அருகே ராட்டினமங்கலத்தில் உள்ள நகை கடையின் மொட்டைமாடி ஷட்டரை உடைத்து மர்மநபர்கள் சுமார் 15 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருமாள் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் டிஎஸ்பி தலைமையிலான ஆரணி தாலுகா போலீசார் பார்வையிட்டனர். முதற்கட்ட விசாரணையில், கேஸ் வெல்டிங் மூலம் மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்