R.N.Ravi | ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு - பார்த்து பிரமித்து நின்ற ஆளுநர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு கொண்டாட்டத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கொலு நிகழ்ச்சியில், பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.