Protest | வருவாய்த்துறை அதிகாரிகள் சேர்ந்து எடுத்த முடிவு.. ஸ்தம்பித்த தமிழகம்
வருவாய்த் துறையினர் போராட்டம் - அரசு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட 7ம் அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி, வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வருவாய்த்துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை சங்கங்களின் சார்பில் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரணியாக சென்று ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா மற்றும் பேரணியில் ஈடுபட்ட நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்ற போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட நிலையில், அரசு சேவைகளை பெற முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட நிலையில், அரசு சேவைகளை பெற முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னே, வருவாய்த்துறையினர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சிதம்பரத்தில் இருந்து பதிமூன்று கிராம நிர்வாக உதவியாளர்கள் வேனில் சென்றனர். எதிர்பாராத விதமாக வேன் விபத்தில் சிக்கிய நிலையில், 7 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன..