கல்வி மீது இவ்வளவு அன்பா.. ஒட்டுமொத்த Queen Marys-உம் ஆனந்த கண்ணீரில்..

Update: 2025-04-08 02:54 GMT

சென்னை ராணி மேரி கல்லூரியில் ஓராண்டு மட்டுமே பணியாற்றிய ஓய்வுபெற்ற பேராசிரியர் கமலா, தனது ஓய்வூதிய பணப்பலனில் 35 லட்ச ரூபாயை வழங்கி, கணினி ஆய்வகத்தை புதுப்பித்துள்ளார். 1960-61-இல் ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணியைத் தொடங்கிய அவர், பின்னர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 35 லட்ச ரூபாயை ராணி மேரி கல்லூரிக்கு வழங்கி, குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட அறை, 25 அதிநவீன கணினிகள், ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஆகியவற்றை நிறுவியுள்ளார். உடல்நலக்குறைவால் அவரால் விழாவுக்கு வர முடியாத நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்