இலங்கை சிறையிலிருந்து விடுதலை.. தமிழகம் திரும்பினர்

Update: 2025-05-03 08:19 GMT

இலங்கை சிறையிலிருந்து விடுதலை.. தமிழகம் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 25 மீனவர்கள் சென்னை வந்தனர். பிப்ரவரி 21-ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த11 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மன்னார் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதேபோல, மார்ச் 7-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 ராமேஸ்வரம் மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் கோரிக்கையின் படி, தமிழகத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. இதையடுத்து விமானம் மூலம் சென்னை வந்த 25 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்