Rat eating video || ஜூஸ் கடையில் பழங்களை கொறிக்கும் எலி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
சென்னையில் ஜூஸ் கடை ஒன்றில், பழங்களை எலி சாப்பிடும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலம்பாக்கம் 200 அடி சாலையில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடை ஒன்றில், பழங்களின் மீது எலி ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து, பழங்களை ருசித்து சாப்பிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ஒருவர், வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, எங்கு வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள் என்று அலட்சியமாக உரிமையாளர் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆன்லைன் மூலமாக வீடியோவுடன் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.