நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கொடவா சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்மிகா பங்கேற்காதது குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடாவுக்கு கொடவா சமூகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, தனது அர்ப்பணிப்பு, திறமையின் மூலம் இந்திய திரைத்துறையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அவரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.