Ramraj Showroom | Pazhani | பழனியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் இரண்டாவது கிளை திறக்கப்பட்டுள்ளது.
24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஷோரூமை, பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருமான சுப்பிரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார் தொடக்கி வைக்க, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜே.பி சரவணன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன், கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.