ராம்ராஜ் நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு
திருப்பூரில், ராம்ராஜ் நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட ஷோ ரூமை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். பாரம்பரிய வேட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ராம்ராஜ் நிறுவனம் தனது இரண்டாவது கிளையை, திருப்பூர் பி.என்.ரோடு, நெசவாளர் காலனியில் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தொடங்கி நடத்தி வந்தது. தற்போது, 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்ட ஷோ ரூமை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். விழாவில் பேசிய ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன், இரண்டாவது கிளையாகத் தொடங்கப்பட்ட இந்த ஷோ ரூம், விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியை தந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சார ஆடையை பரப்பி, புதிய புரட்சியை ராம்ராஜ் ஏற்படுத்தி இருப்பதாகவும், தற்போது, இளைஞர்களும் பாரம்பரிய ஆடைகளை அணியும் வகையில் அனைத்து நிறங்களிலும் ஆடைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.