ஆரணி பகுதியில், ராம்ராஜ் காட்டன் ஏ.சி.ஷோரூமின் புதிய கிளை தொடங்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில், ராம்ராஜ் காட்டன் ஏ.சி ஷோரூமின் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது. இதனை ஆரணி நகர் மன்ற தலைவர் ஏ.சி. மணி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த நிலையில், ராம்ராஜ் காட்டன் இயக்குனர் சுமதி நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த வியபாரிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.