Ramanathapuram | கடல் கடந்து காதல்.. பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு மூன்று முடிச்சு போட்ட தமிழ் பையன்

Update: 2025-10-25 01:52 GMT

ராமநாதபுரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கும் தமிழ் பையனுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் தீபன்குமார். இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஹாஸ்பிடாலிட்டி அலுவலராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அவ்ஃபா என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் ராமநாதபுரத்தில் வைத்து தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்தியாவில் திருமணம் செய்யும் முறை, சேலை அணிவது ஆகியவை மிகவும் வித்தியாசமாக உள்ளது என்றும், தான் காதலித்த நபரை திருமணம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும் மணப்பெண் அவ்ஃபா, தெரிவித்தார்.

எங்கள் வீட்டில் அனைவரும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதாலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணம் என்பது அவரவர் விருப்பம் என்பதாலும் இருதரப்பிலும் பிரச்சினை ஏற்படவில்லை என மணமகன் தீபன்குமார், தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்