RajaRaja Cholan | மாமன்னன் ராஜராஜ சோழனின் வருகை - மெய்சிலிர்க்க அறிவித்த சிவனடியார்
திருவாரூரில் மன்னர் ராஜராஜ சோழன் வருவதாக அறிவிக்கும் சிவனடியார் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது... திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ராஜ ராஜ சோழன், அப்பர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தருடன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மன்னர் ராஜராஜ சோழனின், திருப்பெயரிட்டு வருவதாக அறிவிக்கும் சிவனடியார் ஒருவரின் வாழ்த்து முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...